Sangathy
News

இந்திய வம்சாவளி தமிழர்கள் இலங்கை வந்து 200 வருடங்கள் பூர்த்தி; முத்திரை வடிவமைப்பிற்கான யோசனைகள் கோரப்பட்டுள்ளன

Colombo (News 1st) இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அம்மக்கள் இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு வழங்கிய பங்களிப்பை கௌரவித்து, அவர்களை பாராட்டுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

இதற்காக ‘மலையகம் – 200’ எனும் தொனிப்பொருளின் கீழ் பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இதன் ஓர் அங்கமாக விசேட முத்திரையொன்றை வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

அந்த முத்திரை எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும், அதில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் எவை என்பன குறித்து மக்களிடமிருந்தும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.

மலையக கலை, கலாசார, பண்பாட்டு, பாரம்பரிய விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையில் முத்திரைக்கான வடிவமைப்பு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, ஏதேனும் யோசனை அல்லது மாதிரியை தயாரிக்கக் கூடியதாக இருந்தால், அவற்றை உரிய வகையில் அனுப்பி வைக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

கருத்துகளையும் யோசனைகளையும் எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதிக்குள்
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு,
இலக்கம் 45,
புனித மைக்கல் வீதி,
கொழும்பு – 03

எனும் முகவரிக்கு ‘பதிவு’ தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

Proposed refinery at Hambantota: expressions of interest sought

Lincoln

பம்பலப்பிட்டியிலிருந்து கரையோரப் பாதை தற்காலிகமாக ஒரு வழி பயணம்

John David

Postal vote of 2023 Local Authorities poll postponed

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy