Sangathy
News

செர்பியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு: காரில் சென்றவர் சரமாரியாக சுட்டதில் 8 பேர் பலி

Serbia: செர்பியாவில் பாடசாலை மாணவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் பலியான சோகம் முற்றிலும் நீங்காத நிலையில், தற்போது மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

தலைநகர் பெல்கிரேட்டிலிருந்து (Belgrade) 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மால்டினோவா மற்றும் டுபோனா கிராமங்களில் தான் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

காரில் பயணித்த நபர் ஒருவர் தனது துப்பாக்கியால் மால்டினோவாக்  (Mladenovac)   டுபோனா (Dubona) கிராமங்களில் மக்களை சரமாரியாக சுட்டுள்ளார்.

இதன்போது, 8 பேர் பலியாகியுள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டை நடத்திய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.​ 600 பொலிஸார் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த நபர் அவரது உறவினரின் வீட்டில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்நபரைத் தேட பொலிஸ் படைகளுடன் ஹெலிகொப்டரும் ஆளில்லா விமானங்களும் ஈடுபடுத்தப்பட்டதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

வியாழன் மாலை டுபோனாவில் உள்ள ஒரு பூங்காவில் பொலிஸ் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் பின்னர் ஓடும் காரில் இருந்து துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் அந்நபர் 2002 ஆம் ஆண்டு பிறந்ததாகவும் உள்துறை அமைச்சகம் கூறியதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வௌியாகியுள்ளன. 

முன்னதாக,  கடந்த 3ஆம் திகதி Belgrade-இல் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 8 சிறுவர்களும் காவலாளி ஒருவரும் உயிரிழந்தனர்.

மேலும், 6 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Belgrade-இல் உள்ள  Vladislav Ribnikar எனும் குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டமைக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மாணவர் தனது தந்தையின் துப்பாக்கியை பயன்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.

மிகக் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களைக் கொண்ட செர்பியாவில் துப்பாக்கிச்சூடுகள் மிகவும் அரிதானவை என்றாலும் தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருப்பது ஐரோப்பிய நாடுகளிலேயே செர்பியாவில்தான் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தெனியாய, முலட்டியான கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

Lincoln

Govt may consider hangwomen if execution starts: State Minister

John David

Prez won’t allow troublemakers in saffron robes to destabilise country

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy