Sangathy

Sangathy

ஈக்குவடோர் ஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைப்பு

Colombo (News 1st) எதிர்க்கட்சியினர் பெரும்பான்மையாகவிருந்த ஈக்குவடோர் பாராளுமன்றம் அந்நாட்டு ஜனாதிபதி Guillermo Lasso-இனால் கலைக்கப்பட்டுள்ளது.

குற்றப்பிரேரணையொன்றின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையிலேயே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

நிதியமொன்றிலிருந்து முறைகேடாக பணம் கையாளப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் கண்மூடித்தனமாக இருப்பதாக ஈக்குவடோர் ஜனாதிபதி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவரைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டவிருந்தது.

இந்தநிலையில் அடுத்த பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் வரை 6 மாதங்களுக்கு எந்த இடையூறுமின்றி அவர் பதவியில் நீடிக்கலாமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

%d bloggers like this: