Sangathy
News

அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரிப்பு

Colombo (News 1st) வருடத்தின் முதல் 6 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 92 வீதத்தால் அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் 361.8 பில்லியன் ரூபாவாக இருந்த அரசாங்கத்தின் வரி வருமானம், இந்த வருடத்தின் அதே காலப்பகுதியில் 696.9 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் கம்பனிகள் மற்றும் கம்பனிகள் அல்லாத நிறுவனங்களிடமிருந்து அதிக வரி வருவானம் ஈட்டப்பட்டுள்ளது.

இவற்றினூடாக 243.8 பில்லியன் ரூபா வரி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் சூதாட்டத்தினூடாக திரட்டப்பட்ட வரி வருமானம் 2.5 பில்லியன் ரூபாவாகும்.

Related posts

IMF வேலைத்திட்டத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு அரசியல் தலைவர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை

John David

Police say ‘open mind’ over murder of Schaffter

Lincoln

Liquor producers in low spirits due to revenue drop

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy