Sangathy
News

பஸ்,லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்

Colombo (News 1st) பொது போக்குவரத்து சேவைக்காக பயன்படுத்தப்படும் பஸ், லொறி மற்றும் ட்ரக் வண்டிகளுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான வர்த்தமானி எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஏனைய வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாட்டுகள், சில காலங்களுக்கு தளர்த்தப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கான சாத்தியக்கூறுகளை கருத்திற்கொண்டு, வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் கட்டம் கட்டமாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று சித்திரா பௌர்ணமி

Lincoln

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்க ஆதரவு – ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

Lincoln

SL needs to spend smartly on its youngest children – UNICEF Rep. to SL

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy