Sangathy
News

X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டு தொகை கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவிப்பு

Colombo (News 1st) X-Press Pearl கப்பல் விபத்திற்கான இடைக்கால இழப்பீட்டுத் தொகை நாட்டிற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 878,650.53 அமெரிக்க டொலர் இடைக்கால இழப்பீடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

எஞ்சிய 16 மில்லியன் ரூபா கொடுப்பனவு கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தொகையானது கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் செலவுகளுக்காகக் கிடைக்கப்பெற்றுள்ளது.

கப்பல் நிறுவனத்திற்கான காப்புறுதி நிறுவனத்துடன், அண்மையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய குறித்த இடைக்கால இழப்பீட்டுத் தொகை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்காகவும் இழப்பீடு கோரப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் குறித்த காப்புறுதி நிறுவனம் ஆராய்ந்து வருவதாக சட்ட மா அதிபர் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உத்தேச மின்சார கட்டண திருத்தம் : மக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை இன்று(15)

John David

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் நியமனம்!

Lincoln

US imposes Covid testing for visitors from China -BBC

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy