Sangathy
News

அமெரிக்காவில் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்ட உடல்

அமெரிக்காவின் பென்சில்வேனியா (Pennsylvania) மாகாணத்தில் பதப்படுத்தி, பாதுகாக்கப்பட்டு வந்த உடல் சுமார் 128 ஆண்டுகளுக்கு பிறகு அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பென்சில்வேனியாவின் Reading நகரில் திருட்டு வழக்கில் பிடிபட்ட நபர் ஒருவர் 1895-ம் ஆண்டு சிறையில் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்தார்.

அந்த நபர் கைது செய்யப்பட்ட போது, பொலிஸாருக்கு தனது உண்மையான பெயரைக் கூறாமல் இருந்தார்.

அவர் இறந்த பின்னர் அவரது உடலை யாரும் வாங்கிச்செல்ல வரவில்லை.

இதையடுத்து, அவரது உடலை உரியவர்கள் பெற்றுக்கொள்ளும் வரை எம்பாமிங் நுட்பங்களை (embalming process) பயன்படுத்தி மம்மியாக மாற்றி வைத்திருந்தனர்.

அவருக்கு Stoneman Willie என்று பெயரிடப்பட்டது. அவரது உடல் 128 ஆண்டுகளாக Reading நகரில் உள்ள Theo C. Auman எனும் இறுதிச்சடங்குகளை நடத்தும் நிறுவனத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், Stoneman Willie-இன் உடலை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டதுடன், அவரது உண்மையான பெயரும் வௌிக்கொணரப்பட்டுள்ளது.

Stoneman Willie அயர்லாந்து நாட்டவர் எனவும் நியூயார்க்கில் வசித்ததாகவும் அவரது பெயர் James Murphy எனவும் அவர் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு வந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, Reading நகரில் உள்ள  Forest Hills Memorial Park கல்லறையில் அவரது உடல் சகல மரியாதைகளுடனும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

 

Related posts

யாழில். 20 இளைஞர்களை புனர்வாழ்வுக்கு அனுப்ப நடவடிக்கை

Lincoln

கந்தகாடு புனர்வாழ்வு நிலைய நிர்வாகத்தை மாற்றுவது குறித்து பரிசீலனை – நீதி அமைச்சர்

John David

கெனியன் நீர்த்தேக்கத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy