Sangathy
News

காஸாவில் போர் நிறுத்தம்: ஐ.நா சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

Colombo (News 1st) காஸாவில் மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த வலியுறுத்தி அரபு நாடுகள் கூட்டமைப்பு சார்பில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில், 120 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 

கனடா, இங்கிலாந்து, இத்தாலி, இந்தியா, ஜெர்மனி மற்றும் உக்ரைன் உள்பட 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்த தீர்மானத்தில், உடனடியாக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் எனவும், காஸா பகுதிக்குள் அத்தியாவசிய பொருட்கள் சேவைகளை தொடர்ந்து  தடையின்றி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பணயக்கைதிகள் அனைவரையும் உடனடியாக நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இந்த மாதம் மோதல் தொடங்கியிலிருந்து இதுவரை ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

காஸாவில் கடந்த 20 நாட்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 7,326 போ் உயிரிழந்ததாக காஸாவின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.  

Related posts

Foreign powers want Pak to default like Lanka, claims Pakistan FM Ishaq Dar

Lincoln

சர்வதேச சிறுவர் புற்றுநோய் தினம் இன்று(15)

John David

யாழில் ஜனாதிபதி நிற்கும் நேரம் வாள்வெட்டு சம்பவம் பதிவு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy