Sangathy
Sports

முதல் சுற்றுடன் வௌியேறும் நடப்பு சாம்பியன்

நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து இந்தமுறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றுடன் வௌியேற்றப்பட்டுள்ளது. 

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் காரணமாகவே இங்கிலாந்து அணிக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. 

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அஹமதாபாத்தில் நேற்று(04) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்தும் அவுஸ்திரேலியாவும் மோதின. 

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 48.3 ஓவர்களில் 286 ஓட்டங்களை பெற்றது.

மார்னஸ் லபுஷேன் 71 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். 

கிரிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

287 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணியால் 48.1 ஓவரில் 253 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.

பென் ஸ்டோக்ஸ் 64 ஓட்டங்களையும் டேவிட் மெலன் 50  ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.

Pat Cummins ended the big third-wicket stand, Australia vs England, World Cup, Ahmedabad, November 4, 2023

அடம் ஷம்பா 3 விக்கெட்டுகளையும் மிட்ச்செல் ஸ்டார்க், ஜொஷ் ஹஷல்வூட், பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இது இந்தமுறை உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அடைந்த 6ஆவது தோல்வியாகும். 

இதனால் இந்த சுற்றுடன் நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து வௌியேறுவதுடன் அவர்களுக்கு முதல் சுற்றில் இன்னும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளதுடன் அவை எதிர்வரும் 8 ஆம் திகதி நெதர்லாந்துக்கு எதிராகவும் 11 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராகவும் நடைபெறவுள்ளன.

Related posts

Gundogan scores brace as Man City beat Man United to win FA Cup

Lincoln

ராகுலை மைதானத்தில் வைத்து திட்டித் தீர்த்த லக்னோ அணி உரிமையாளர்..!

tharshi

சர்வதேச பெட்மிண்டன் போட்டியிலிருந்து ஓய்வு பெறும் சாய் பிரனீத்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy