Sangathy
News

வரவு செலவு திட்டத்தில் துண்டு விழும் தொகை 2,851 மில்லியன் ரூபா

Colombo (News 1st) இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்திற்கு அமைய, 2024 ஆம் ஆண்டில் அரச வருமானம் 04,172 பில்லியன் ரூபாவாகும்.

2024 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு அமைய, அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 06,978 பில்லியன் ரூபாவாகும்.

இதற்கிணங்க, வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகை 02,851  மில்லியன் ரூபா.

அடுத்த வருடத்தில்  கடனையும் வட்டியையும் செலுத்துவதற்காக அரசாங்கம் 6,919 பில்லியன் ரூபாவை செலவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, அடுத்த வருடத்திற்கான கடன் தேவை 7,350 பில்லியன் ரூபாவாகும்.

இதற்கிணங்க, அரசாங்கத்தின் கடன் எல்லையான 3900 பில்லியன் ரூபாவை மேலும் 3450 பில்லியன் ரூபாவால் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
 

Related posts

ACJU requests more slots for Islam course at NCOE

Lincoln

பொருளாதார குற்றவாளிகளுடன் அரசியல் கூட்டணி இல்லை – எதிர்க்கட்சி அறிவிப்பு

Lincoln

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் உள்ள பழக்கடையில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy