Sangathy
News

இலங்கையுடனான உறவு வலுப்படுத்தப்படும் – சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூருக்கும் இலங்கைக்கும் இடையில் தற்போதுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சியென் லொங்க் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட சிங்கப்பூருக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இடம்பெற்ற இருதரப்பு கலந்துரையாடல்களைப் பாராட்டி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட கடிதத்திலேயே சிங்கப்பூர் பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில்” இரு நாடுகளுக்கிடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களின் அனுகூலமான முடிவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை விரைவில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளேன்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் இலங்கையை முன்னேற்றப் பாதைக்கு வழிநடத்தும் வேலைத்திட்டத்திற்காகவும் சிங்கப்பூர் பிரதமர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Related posts

Italy: The Hard Right nears power

Lincoln

Singer Sri Lanka launches HONOR X9B

John David

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy