Sangathy
News

மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள்

Colombo (News 1st) மீனவர் பிரச்சினையை மனிதாபிமான அடிப்படையில் அணுகுமாறு இலங்கையிடம் இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று(25) மாலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது மீனவர் பிரச்சினை தொடர்பில் இந்தியா – இலங்கை இடையேயான ஆக்கபூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இருதரப்பு மீனவர்களின் நலன்சார்ந்து மனிதாபிமான முறையில் மீனவர் பிரச்சினையை அணுகுமாறு இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வட மாகாணத்தில் இந்தியாவினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

Excise duty on all varieties of liquor, wines, beer etc. will be increased by 20% from midnight today (03) – Ranjith Siyambalapitiya

Lincoln

விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Lincoln

ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy