Sangathy
World Politics

அமெரிக்காவின் நியூ ஜெர்சி, நியூயார்க் நகரங்களில் நிலநடுக்கம்..!

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதியில் இன்று 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேபோல், நியூயார்க் நகரத்திலும் 4.8 ரிக்டர் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின்போது, புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கின. அலமாரி கதவுகள் மற்றும் சாதனங்கள் குலுங்கின.

நிலநடுக்கம் எதிரொலியால், நியூயார்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்று வந்த காசாவின் நிலைமை குறித்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரையிலும், கிழக்கு நோக்கி லாங் ஐலேண்ட் வரையிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

நிலநடுக்கம் குறித்து, ஐகானிக் எம்பயர் ஸ்டேட் பில்டிங் அதன் எக்ஸ் பக்கத்தில், “நான் நன்றாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில், ” நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் இந்திய புலம்பெயர்ந்தோரை தொடர்பு கொண்டுள்ளது. இதுவரை எந்த ஒரு இந்தியரும் காயமடையவில்லை.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இந்திய- அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த எவரும் தயவுசெய்து madad.newyork@mea.gov.in என்கிற முகவரியில் எங்களை தொடர்புக் கொள்ளலாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

காஸாவில் உதவிப் பொதி விழுந்ததில் 5 பேர் உயிரிழப்பு..!

Lincoln

மூன்று மாதங்களில் 4ஆவது முறையாக வெடித்த ஐஸ்லாந்தின் எரிமலை..!

Lincoln

Suspicion & Investigations

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy