Sangathy
News

பிரதிப்பொலிஸ்மா அதிபரிடம் யாழ். அரச அதிபர் விடுத்த அவசர வேண்டுகோள்!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு வன்முறை கலாசாரத்தை நிறுத்துவதற்கு வாள் உற்பத்தியாளர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சிவபால சுந்தரன் தெரிவித்துள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபரிடம் தான் இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யாழ். சமூக செயற்பாடு மையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க எங்கள் செயற்பாடுகளை ஒன்றிணைப்போம்’ என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அரச அதிபர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், ”இன்றைய காலத்தில் வாள்வெட்டு கலாசாரம், போதைவஸ்து பயன்பாடு அதிகரித்து ஆக்கிரமித்துள்ளது. இவற்றை கட்டுப்படுத்த ஒன்றிணைய வேண்டும். ‘வாள்வெட்டு கலாசாரத்தை தடுக்க வாள் உறபத்தியாளர்களை கைது செய்யுங்கள்’ என அண்மையில் இடம்பெற்ற பொலிஸாருடனான சந்திப்பில் அறிவுறுத்தியுள்ளேன்.

எமது சூழலுக்கேற்ப எமது வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் எமது வாழ்க்கை முறைக்கேற்ப அனுமதிக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் அதனை பயன்படுத்த வேண்டும்.

சிறுவர்களை சினிமா மோசமாக பாதித்துள்ளது. நாங்கள் வழிதவறாமல் செல்வதற்கு நம்பிக்கையூட்டும் வகையில் எமது வாழ்க்கை முறை இருக்க வேண்டும். எமது வாழ்க்கை முறையை சரியாக கொண்டு சென்றாலே எதிர்கால சந்ததிகள் முறையான, சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவார்கள்” என்றார்.

Related posts

25, 26 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட தீர்மானம்

John David

எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மீண்டும் மின் கட்டண திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானம்

John David

Attacks on farmer leaders: MONLAR condemns inaction of authorities

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy