Sangathy
News

நாளை (16) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் சுகாதார தொழிற்சங்கங்கள்

Colombo (News 1st) பல சுகாதார தொழிற்சங்கங்கள் நாளை (16) முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தயாராகி வருகின்றன.

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள், கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள், மருந்தாளர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், மருந்து கலவையாளர்கள் மற்றும் பூச்சியியல் அதிகாரிகள் உள்ளிட்ட 72 சுகாதார சங்கங்களின் உறுப்பினர்கள் இதில் இணைந்துகொள்ளவுள்ளனர்.

35,000 ரூபா கொடுப்பனவு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் ஷானக போபிட்டிய தெரிவித்தார்.

இதேவேளை, நாளை மறுதினம் (17) காலை 07 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு அரச தாதியர்கள் தயாராகின்றனர்.

தமது தொழிற்சங்க நடவடிக்கையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு, அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என அரச தாதியர்கள் சங்கத்தின் அஜித் ரத்னாயக்க கூறினார். 
 

Related posts

சீன வௌிவிவகார அமைச்சர் Qin Gang பதவி நீக்கம்

Lincoln

Five MPs tour Philippines to study ‘best practices of health system’

Lincoln

Dam collapse in China could point to a ‘black swan’ disaster

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy