Sangathy
News

வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது

Colombo (News 1st) வாகன விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்தை தவிர்க்க தவறியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் மோதிய கொள்கலன் சாரதியும் நேற்று (25) கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்கவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சனத் நிஷாந்தவின் ஜீப், அதிவேக வீதியின் 11 ஆவது மைல் கல் பகுதியில், முன்னால் பயணித்துக்கொண்டிருந்த கொள்கலன் வாகனத்துடன் மோதியதில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த நேற்று உயிரிழந்தார்.

இந்த  விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பு உத்தியோகத்தரும் உயிரிழந்தார்.

நான்கு பிள்ளைகளின் தந்தையான சனத் நிஷாந்த தனது 48 ஆவது வயதில் காலமானார்.

இதனிடையே, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் இன்று மாலை  புத்தளம் ஆரச்சிகட்டுவையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அங்கு வைக்கப்படவுள்ளது.

Related posts

Godahewa asks SLPP leaders if they have no shame

Lincoln

Govt may consider hangwomen if execution starts: State Minister

John David

Navy’s latest acquisition Offshore Patrol Vessel P 627 nears home

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy