Sangathy

Sangathy

தனுஷ்க குணதிலக்க மீதான 3 குற்றச்சாட்டுகள் வாபஸ்

Colombo (News 1st) இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் தொடரப்பட்டுள்ள பாலியல் வழக்கின் 4 குற்றச்சாட்டுகளில் 3 குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலிய அரச சட்டத்தரணியால் குறித்த குற்றச்சாட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

29 வயதான பெண்ணொருவர், தனுஷ்க குணதிலக்க மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கு தொடர்ந்திருந்தார்.

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்காக கடந்த நவம்பர் மாதம் அவுஸ்திரேலியாவிற்கு சென்றிருந்த போது, 32 வயதான தனுஷ்க குணதிலக்க மீது இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

%d bloggers like this: