அனைத்து மத ஸ்தலங்களையும் பதிவு செய்ய நடவடிக்கை
Colombo (News 1st) அனைத்து மத ஸ்தலங்களையும் நிறுவனங்களையும் பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என புத்தசாசன அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டின் பல பாகங்களிலும் அனுமதியின்றி ஏராளமான நிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
பதிவு செய்யப்படாத மத ஸ்தலங்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.