Sangathy

Sangathy

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

Colombo (News 1st) பூண்டுலோயா – புசல்லாவவை பகுதியில் மரக்கிளையொன்று முறிந்து வீழ்ந்தமையினால் சிறுமியொருவர் நேற்று(16) உயிரிழந்துள்ளார்.

புசல்லாவாவையிலிருந்து  அக்கரப்பத்தனைக்கு மோட்டார் சைக்கிளில் தந்தையும் மகளும் பயணித்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பின்பாக அமர்ந்திருந்த சிறுமியின் தலை மீது மரக்கிளை முறிந்து வீழ்ந்தமையால் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் அக்கரப்பத்தனை உருவள்ளி பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கொத்மலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: