Sangathy
News

நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள்

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் 22,000 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார். 

குறித்த வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

இதற்கமைய, ஆசிரியர்கள் ஓய்வுபெற்றமையினால் ஏற்பட்ட வெற்றிடங்களுக்குரிய பாடங்களுக்கான ஆசிரியர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்தார். 

மாகாண சபைகளின் கீழ் காணப்படும் பாடசாலைகள் மற்றும் மத்திய அரசாங்கத்தின் கீழ் காணப்படும் பாடசாலைகளுக்காக இவ்வாறு ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 

எதிர்வரும் பாடசாலை தவணையின் போது ஆட்சேர்ப்பு நடவடிக்கையை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர சுட்டிக்காட்டினார். 

Related posts

AMS warns of chaos in health sector due to new retirement rule

Lincoln

Modernization of the agriculture sector is a priority for the Government – President

Lincoln

Rape of Mannar for mineral sands on the cards

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy