Sangathy
Cinema World

காதலில் விழுவேன் என்று நினைக்கவில்லை : ‘குட் நைட்’ பட நடிகை

‘குட் நைட்’ பட நடிகை மீதா ரகுநாத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இதனையடுத்து சமூக வலைத்தளம் வாயிலாக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தன. இந்நிலையில் படுகா முறைப்படி தனது திருமணம் நடைப்பெற்றது குறித்து மீதா ரகுநாத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இரண்டே படங்களால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் மீதா ரகுநாத். பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் தோற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இவரின் திருமணம் அண்மையில் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்தது. இந்நிலையில் மீதா ரகுநாத் தனது திருமணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ‘முதல் நி முடிவும் நீ’ படத்தின் வாயிலாக நடிகையாக அறிமுகம் ஆனவர் மீதா ரகுநாத். பள்ளி பருவ காதலை மையமாக வைத்து வெளியான இப்படத்தில் கிஷன் தாஸ் ஜோடியாக நடித்திருந்தார். நேரடியாக ஓடிடியில் ரிலீசான ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றார் மீதா.

இதனையடுத்து மணிகண்டன் ஜோடியாக ‘குட் நைட்’ படத்தில் நடித்தார். கடந்தாண்டு குறைந்த பட்ஜெட்டில் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் மற்றும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் ரிலீசான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. குறட்டையை மையமாக வைத்து பீல்குட் படமாக குட் நைட்டை இயக்கியிருந்தார் விநாயக் சந்திரசேகரன்.

குறிப்பாக இப்படத்தில் மீதா ரகுநாத்தின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அனு கதாபாத்திரத்தில் அதிர்ந்து பேசாத அமைதியான பெண்ணாக நடித்து பாராட்டுக்களை அள்ளினார். இவர் போல நமக்கு காதலி, மனைவி கிடைக்க மாட்டார்களா? என பல இளைஞர்கள் ஏங்கும் அளவிற்கு அனு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் மீதா ரகுநாத். இதனால் ரசிகர்களின் கிரஸ் லிஸ்டில் இணைந்தார். இந்நிலையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருமணமும் நடந்து முடிந்தது. இதுக்குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது..,

“பாரம்பரியமான படுகா முறையில் எனக்கு திருமணம் நடைபெற்றது நானே எதிர்பாராத ஒன்று. காதலில் விழுவேன் என நானே எதிர்பார்க்கவில்லை. நான் அதை செய்தேன். அதே போன்று நான் எதிர்பாராத ஓன்று படுகா திருமணம். அது ஒரு அழகான கொண்டாட்டமாக இருந்தது. ‘மதில்’ என்பது வில் போன்றதொரு அமைப்பாகும். ஒவ்வொரு படுகா குடுமபத்திலும் இது ஒரு புனிதமான இடமாகும்.

நாங்கள் படுகா கிராமத்தில் திருமணம் செய்யவில்லை என்றாலும் எங்களின் திருமணம் கலாச்சாரத்துக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டும் என விரும்பினோம். என்னுடைய வீட்டில் உள்ளவர்கள் கலை மேதைகள் என்பதால் மதில் மற்றும் அதனை சுற்றிய அலங்காரங்களை என்னுடைய அம்மா ஆலோசனையாக சொல்ல, என்னுடைய சகோதரி அதனை முழுமையாக வடிவமைத்தார். என்ன வண்ண உபயோகிக்க வேண்டும் என அனைத்தையும் அவர்களே செய்தனர். இந்த திருமணத்தின் பெரும் பகுதி கலைநயத்தோடு இருந்தது.

அன்பை கண்டறிவது என்பது தெய்வீகமான தருணம். அப்படிப்பட்ட அன்பு உங்கள் முன்னால் தோன்றும் சமயத்தில் அதனை அடையாளம் காணும் ஆற்றலும், அடையும் தைரியமும் இருக்க வேண்டும். அதனை எனக்கு வழங்கிய இந்த பிரபஞ்சத்திற்கு நான் நன்றியுள்ளவலாக இருப்பேன். நான் காதலித்தேன். திருமணம் செய்தேன். அது ஒரு பாரம்பரியமான படுகா முறை திருமணமாக அமைந்தது கூடுதல் போனஸ்.”

இவ்வாறு நீண்ட பதிவை பகிர்ந்துள்ளார் மீதா ரகுநாத்.

Related posts

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி..!

Lincoln

ஆரவுக்கு காஸ்ட்லி கிஃப்ட் பரிசளித்த அஜித்..!

tharshi

கோலாகலமாக நடக்கும் விஜயகுமார் பேத்தியின் திருமண விழா..! (படங்கள் இணைப்பு)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy