குளியாபிட்டி பிரதேசத்தை சேர்ந்த இளைஞன் தனது காதலியின் வீட்டுக்குச் சென்று காணாமல் போன சம்பவமென்று பதிவாகியுள்ளது.
குளியாப்பிட்டிய கபலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சுசித ஜயவன்ச என்பவரே 6 நாட்களாக காணாமல் போயுள்ளார். இவரொரு உணவுக்கடை உரிமையாளராவார்.
இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாஉல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.
அவர் குறித்த வீட்டிற்கு சென்றதிலிருந்து அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென தெரியவந்துள்ளது.
சுசிதா சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரிடமிருந்து சுசிதாவின் நண்பரெருவருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
இந்நிலையில், காணாமல் போனதாகக் கூறப்படும் சுசிதாவின் நண்பர் கூறியது..,
“செவ்வாய்கிழமை இரவு 7:58 மணிக்கு சிகிடி (காதலியின் தந்தை) என்ற நபரிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, ஒரு தந்தையாக என் மகளுக்கு நன்மை செய்துள்ளேன். அதைப்பற்றி பேசுவது பிரயோசணமற்றது, அவனை நான் கொன்றுவிட்டேன், இனி அவனால் திரும்பி வர முடியாது’என்று கூறியதாக குறித்த நண்பர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.