Sangathy
Breaking NewsSrilanka

களுத்துறை நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பமான சூழ்நிலை..!

களுத்துறை நகரின் மையப்பகுதியில் இன்று (26) மக்கள் இயக்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது.

வாழ்க்கைச்சுமை, வரிவிகிதம், மின்கட்டணம், பயங்கரவாதச் சட்டம், போராட்டக்காரர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜன அகல இயக்கத்தினர் பிரதான பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காலை முதல் களுத்துறை நகரிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் விசேட பொலிஸ் பாதுகாப்பும், ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்தைச் சுற்றிலும் பல பொலிஸ் குழுக்கள் குவிக்கப்பட்டிருந்தன.

கடும் வெயிலில் நடந்த போராட்டத்தின் போது, பல எதிர்ப்பாளர்கள் பதாகைகளை ஏந்தியவாறு தரையில் அமர்ந்தனர்,

மேலும் அவர்களது ஆதரவாளர்கள் இருவர் போராட்டக்காரர்களுக்கு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த கூடாரத் துணியை எடுக்கச் சென்ற போது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கூடாரத்துணியை கொண்டு வந்தவர்களுடனும் அதற்கு ஆதரவளித்தவர்களுடனும் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையின் பின்னர், பெருந்தொகையான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கூடாரத்துணியையும் நான்கு பேரையும் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Related posts

அரிசி – பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்ட வரி குறைப்பு..!

tharshi

நீர்த்தேக்கத்தில் மூழ்கி பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் உயிரிழப்பு..!

tharshi

பேரூந்து விபத்து : ஒருவர் பலி – 37 பேர் காயம்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy