என் மனைவியால் தான் இந்த மாற்றம்..எனக்கும் இது பிடிச்சிருக்கு : நெகிழ்ச்சியாக பேசிய தனுஷ்..!

தன் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவை பற்றி தனுஷ் பேசிய பழைய பேட்டி ஒன்று ரசிகர்களால் தற்போது இணையத்தில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார். தமிழில் மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று அசத்தி வருகின்றார் தனுஷ். தற்சமயம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ராஷ்மிகா, நாகர்ஜுனா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இதையடுத்து தன் ஐம்பதாவது திரைப்படமான ராயன் பட வேலைகளிலும் பிசியாக இருக்கின்றார் தனுஷ். தன் ஐம்பதாவது திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வரும் தனுஷ் அப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளையும் ஒருபக்கம் செய்து வருகின்றார். இதற்கிடையில் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் இளம் நடிகர்களை வைத்து இயக்கி வருகின்றார்.

மேலும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றிலும் தனுஷ் நடிக்கவுள்ளார். இவ்வாறு ஒருபக்கம் நடிப்பு மறுபக்கம் இயக்கம் என செம பிசியாக இருக்கும் தனுஷை பற்றி சமீபத்தில் வந்த ஒரு தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் முறையாக விவாகரத்து பெற இருப்பதாக முடிவெடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பிரிந்து வாழும் இவர்கள் எப்படியாவது மீண்டும் சேர்ந்துவிடுவார்கள் என ரசிகர்கள் முதல் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வரை நினைத்துக்கொண்டு இருந்தனர். ஆனால் திடீரென இவர்கள் இருவரும் முறையாக விவாகரத்து பெறப்போவதாக வந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

இந்நிலையில் இது சரியான முடிவல்ல, மீண்டும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா சேர வேண்டும் என ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சிலர் தனுஷ் ஐஸ்வர்யாவை பற்றி பேசும் பழைய வீடியோக்களை ஷேர் செய்தும் வருகின்றனர். அந்த வகையில் கொடி படம் வெளியான சமயத்தில் எடுக்கப்பட்ட பேட்டி ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

அந்த பேட்டியில் தொகுப்பாளர் கோபிநாத் தனுஷிடம், ஏன் தற்போது எல்லாம் எங்கு சென்றாலும் வேஷ்டியை அணிந்து செல்கின்றீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தனுஷ், என் மனைவி வேஷ்டி சட்டை போட்டால் நன்றாக இருக்கும் என சொன்னார்கள். அதனால் தான் வேஷ்டி சட்டை அணிய துவங்கினேன். எனக்கும் இது ரொம்ப பிடித்துவிட்டது.
ஒரு தமிழனாக வேஷ்டி சட்டை அணிவதில் பெருமை கொள்கின்றேன் என கூறினார் தனுஷ்.

இதுமட்டுமல்லாமல் தனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமும் தன் மனைவி ஐஸ்வர்யாவால் தான் என கூறினார் தனுஷ். இந்நிலையில் இவ்வாறு ஒற்றுமையாக இருந்தவர்கள் தற்போது பிரிவதாக அறிவித்ததை தனுஷின் ரசிகர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles