Sangathy
World Politics

பள்ளிகளுக்கு விடுமுறை – 8 ஆம் திகதி சூரிய கிரகணம் : அவசரநிலை அறிவித்த அமெரிக்கா..!

வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நிகழ உள்ள சூரிய கிரகணத்தை முன்னிட்டு வட அமெரிக்காவின் நயாகரா பிராந்தியத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வானியல் அரிய நிகழ்வுகளில் ஒன்றான சூரிய கிரகணம் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த சூரிய கிரகணம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் தொடங்க உள்ளது. முதல் நாடாக மெக்ஸிகோ இந்த சூரிய கிரகணத்தை கண்டு ரசிக்கலாம். அமெரிக்கா முழுவதும் தெரியும் இந்த அரிய சூரிய கிரகணம் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்டில் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில் நயாகரா பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் தெற்கு ஒன்டாரியோவில் நயாகரா பிராந்தியம் உள்ளது. இங்குள்ள நயாகரா நீர் வீழ்ச்சி உலகப் புகழ்பெற்றது. அப்பகுதியில் நடைபெற உள்ள சூரிய கிரகணம் அங்குள்ள நீர் வீழ்ச்சியில் பிரதிபலிக்கும் அழகே தனி.. அதனை காண்பதற்கு மக்கள் குவிவார்கள்.

கடந்த 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியுள்ளதால் வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி அங்கு 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை முன்னிட்டு அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகால தேவைகலான மொபைல் போன் சேவை, இணையதள சேவை, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

கிரகணத்தை காண விரும்பும் மக்கள் சாலை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பிரச்சனைகளை உருவாக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அரிய சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 8 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை பார்க்க விரும்புபவர்கள நேரடியாக பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Related posts

400 வாயில்கள்.. 5 ஓடுபாதைகள்.. உருவாகிறது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்..!

tharshi

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 12 மீனவா்கள் உயிரிழப்பு : இருவர் மாயம்..!

Lincoln

இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் கடும் கண்டனம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy