Sangathy
Life Style

எக்டோபிக் கர்ப்பம் என்றால் என்ன…? : ஏன் உண்டாகிறது..?

கர்ப்ப காலத்தில் சிக்கல்கள் அசவுகரியங்கள் உண்டாவது இயல்பு. அதேநேரம் ஒவ்வொரு பெண்ணும் கருவுற்றதும் தங்களது கர்ப்பம் சரியானதா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்ய வேண்டும். ஏனெனில் கருவானது கருப்பைக்குள் வராமல் ஃபெலோப்பியன் குழாயிலேயே தங்கியிருந்தால் அது எப்போதும் கருப்பைக்குள் வராது. மேலும் அது தாய்க்கு ஆபத்தை உண்டாக்கலாம்.

எக்டோபிக் கர்ப்பம் என்பது ஆரோக்கியமான கர்ப்பம் தரித்தலில் இருந்து முற்றிலும் வேறானது. எக்டோபிக் கர்ப்பத்தில் கருவுற்ற முட்டையானது கருப்பைக்குள் வராமல் கருப்பையின் வெளிப்புற சுவரில் இணைந்துவிடும்.

ஆரோக்கியமான கர்ப்பத்தில் கருமுட்டையானது விந்தணுக்களுடன் இணைந்து தானாகவே கருப்பையின் சுவரில் இணைந்து விடும். எக்டோபிக் கர்ப்பத்தில் கருமுட்டை தவறான இடத்தில் வளரும். வெளிப்புற சுவரில் அமைந்துவிடும், ஃபெலோப்பியன் குழாய்களில் அமைந்துவிடும். மேலும் இது கருவறையின் வேறு பகுதிகளிலும் கூட அமைந்துவிடும். கர்ப்பப்பைக்குள் இல்லாமல் கருப்பை வாய் பகுதியில் அடிவயிற்றுக்குழிக்குள் என்று கருவானது வளரலாம்.

ஏன் ஆபத்தானது?

எக்டோபிக் கர்ப்பமானது தீவிர நிலை. இந்த நிலையில் இருக்கு பெண்ணுக்கு உடனடி சிகிச்சை தேவை. ஏனெனில் கருமுட்டையால் உயிர் பெற்று இருந்தாலும் கருப்பை தவிர்த்து எங்கு இருந்தாலும் அவற்றால் வளர முடியாது. மேலும் இது அப்பெண்ணின் உறுப்புகளை பாதிக்க செய்யும். இதனால் உட்புறத்தில் ரத்தக்கசிவு உண்டாகலாம். நோய்த்தொற்றுக்கு ஆளாகலாம். எக்டோபிக் கர்ப்பம் வந்தால் அந்த கருவை அகற்றுவது தான் சிறந்த வழி. 100 பெண்களில் 2 பேருக்கு இந்த எக்டோபிக் கர்ப்பம் உண்டாக வாய்ப்பிருக்கிறது.

அறிகுறிகள்

கருவுற்ற உடன் உடலில் உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள், அசெளகரியங்கள் போன்றவையே குழப்பமாக இருக்கும் என்றாலும் இந்த எக்டோபிக் கர்ப்பம் அறிகுறிகள் தனியாக தீவிரமாக இருக்கும். ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அறிகுறி மாறுபடும். சிலருக்கு கருவுற்ற அறிகுறி போன்று இவையும் இருக்கும். எனினும் கருவுற்றதை உறுதி செய்த உடன் இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் நீங்கள் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது.

* யோனி ரத்தப்போக்கு (புள்ளிகளாக இல்லாமல் துளிகளாக வெளியேறுவது)

* குமட்டல் மற்றும் வலியுடன் வாந்தி

* வயிற்று வலி

* தீவிரமான வயிற்றுப்பிடிப்புகள்

* தலைச்சுற்றல் அல்லது பலவீனம்

* தோள்பட்டை, கழுத்து அல்லது மலக்குடலில் வலி

* ஃபெலோப்பியன் குழாய் சிதைந்தால் வலி மற்றும் இரத்தப்போக்கு கடுமையானதாக இருக்கும்.

* அதிகப்படியான களைப்பு

மேற்கண்ட அறிகுறிகள் கருவுற்ற அறிகுறிகளோடு தொடர்பு கொண்டவை என்றாலும் அறிகுறிகளில் உண்டாகும் வித்தியாசத்தை நீங்கள் கண்டறிய வேண்டும்.

கருமுட்டைகள் சரியான பாதையில் செல்ல கருப்பை தொடர்பான அனைத்து செயல்முறைகளும் அதன் பணிகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். கருமுட்டை கருப்பைக்குள் வர முயற்சிக்கும் பாதையில் ஃபெலோப்பியன் குழாய்கள் சேதம் அடைந்தாலும் எக்டோபிக் கர்ப்பம் உண்டாகலாம். அப்போது கருமுட்டையானது வேறு ஏதேனும் இடத்தில் அமர்ந்துவிடலாம். இது இடம் மாறிய கர்ப்பம் என்று சொல்லப்படுகிறது.

35 வயதுக்கு மேல் குறிப்பாக 40 வயதுக்கு மேல் கருவுறுபவர்கள், அடிக்கடி அபார்ஷன் செய்து கொண்டவர்கள், பெல்விக் டிசீஸ் கொண்டவர்கள் இந்த பாதிப்பை எதிர்கொள்ள வாய்ப்புண்டு. புகைப்பிடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவருக்கும் எக்டோபிக் கர்ப்பம் சாத்தியமுண்டு.

Related posts

உடல் பருமனை குறைக்கும் அறுவை சிகிச்சை ஆபத்துகள் : உஷார்…!

tharshi

40 வயதுக்கு பிறகு கர்ப்பமாவதில் உள்ள சவால்கள்…!

tharshi

குழந்தைகளின் பற்களை சீரமைத்தல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy