Sangathy
World Politics

400 வாயில்கள்.. 5 ஓடுபாதைகள்.. உருவாகிறது உலகின் மிகப்பெரிய விமான நிலையம்..!

துபாய் சர்வதேச விமான நிலையத்தைவிட சுமார் ஐந்து மடங்கு பெரிய மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய விரைவில் உருவாகிறது மிகப்பெரிய விமான நிலையம். கட்டுமானத்திற்கு பிறகு இந்த விமான நிலையம்தான் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக இருக்கும்.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கடுமையான மழை வெள்ளத்தை அனுபவித்தது. அப்போது, ஓட்டுமொத்த நாடே கலங்கி போனது. மழை வெள்ளத்தில் சர்வதேச விமான நிலையங்களுக்கும் தண்ணீர் புகுந்து விமானங்கள் கப்பம் போல மிதக்க நேரிட்டது. எனினும், தீவிரமான மீட்புப்பணிகளால் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றது துபாய்.

துபாய் நாடு பல்வேறு நாடுகளுக்கு முக்கிய நாடாக இருக்கின்றது. எக்கச்சக்கமான வெளிநாட்டு மக்கள் அங்கு வேலைக்காக சென்று இருந்து வருகிறார்கள். பொருளாதாரம், வளர்ச்சி, மேம்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் அதிக வாய்ப்புகளை வழங்கும் இந்த துபாய் தற்போது மிகப்பெரிய வரலாற்றை படைக்கவிருக்கின்றது.

உலகின் மிகப்பெரிய விமான நிலையத்தை உருவாக்கவிருக்கின்றது துபாய். இதன் கட்டுமான பணிகளுக்கான அனுமதி கிடைத்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம், புதிய விமான நிலையத்தின் பயணிகள் முனையத்திற்கான வடிவமைப்பிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

விரைவில் உருவாகும் இந்த விமான நிலையத்திற்கு “அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம்” என பெயரிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையமாக மட்டுமல்லாது சிறந்ததாக இருக்கும் என்றும், அதிநவீன தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதிய விமான நிலையத் திட்டம் சுமார் 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (128 பில்லியன் திர்ஹம்) இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 2.9 லட்சம் கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இது தொடர்பாக வெளியிடப்பட்ட எக்ஸ் செய்தியில்,

இது உண்மையாகும்போது உலகின் மிகப்பெரிய விமான நிலையம், மிகப்பெரிய துறைமுகம் மற்றும் மிகப்பெரிய நகர மையம் போன்ற பண்புகளை துபாய் கொண்டிருக்கும்.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் துபாய் சர்வதேச விமான நிலையத்தின் அனைத்து செயல்பாடுகளும் புதிய விமான நிலையத்திற்கு மாற்றப்படும் என கூறப்பட்டு இருக்கின்றது. புதிய முனையத்தின் திறப்பு விழா விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த வகையில், உலகின் மிகப்பெரிய விமான நிலையம் என்கிற பெருமையை விரைவில் அடையவிருக்கிறது அல் மக்தூம் சர்வதேச விமான நிலையம்.

Related posts

நைஜீரியாவில் 287 மாணவர்கள் கடத்தல்..!

Lincoln

இஸ்ரேலியத் தாக்குதல் : ஹமாஸ் தலைவரின் மகன்கள் உயிரிழப்பு..!

tharshi

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy