Sangathy
Breaking NewsIndia

டெல்லியில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : அதிரடி காட்டிய போலீஸ்..!

தலைநகர் டெல்லியில் இருக்கும் சுமார் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஈ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி பேசி இருக்கிறார்.

டெல்லி-என்சிஆர் பகுதியில் உள்ள பல பள்ளிகளுக்கு இன்று காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்து பீதியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதனால், பல பள்ளிகள் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வருகூறார்கள். தொலைக்காட்சிகளின் அறிக்கைகளின்படி, இன்று ஒரே நாளில் சுமார் 50 பள்ளிகளுக்கு மிரட்டல் மெயில் வந்துள்ளது.

இந்த மிரட்டல் சம்பவம் தொடர்பாக,

“நாங்கள் அனைத்து பள்ளிகளையும் சோதனை செய்துள்ளோம். எனினும், இதுவரை எந்த வெடிக்குண்டும் கிடைக்கவில்லை. மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம்” அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

டெல்லி மட்டுமல்லாது உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் இருக்கும் சில பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கபட்டு இருக்கின்றன. அந்த வகையில், சம்பவ இடத்திற்கு டெல்லி மற்றும் நொய்டா போலீஸார் மோப்பநாய் குழுவுடன் வந்து சோதனையில் ஈடிபட்டனர். “முதற்கட்ட விசாரணையில், நேற்று முதல் இன்று வரை பல இடங்களுக்கு ஒரே மாதிரியான மெயில் அனுப்பப்பட்டது தெரியவந்துள்ளது. பல இடங்களில் பகிறபட்ட இந்த மின்னஞ்சலில் திகதி இடம்பெறவில்லை. மேலும், இந்த ஒரே செய்தியை பல பேருக்கு ஒரே நேரத்தில் அனுப்பி இருப்பதும் தெரியவந்துள்ளது.

டெல்லி-என்சிஆரில் உள்ள பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்து டிசிபி தென்மேற்கு ரோஹித் மீனா கூறுகையில்,

“அதிகாலை 4.15 மணியளவில் ஒரே மின்னஞ்சல் பல பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, பள்ளிகளை மூட முடிவு செய்து அனைத்து பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. எங்கள் தொழில்நுட்ப பிரிவு முதல்கட்ட விசாரணையின் மூலம் இது ஒரு பல பேருக்கு அனுப்பிய மின்னஞ்சல் என்று தெரிகிறது… மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்கள் ஒவ்வொரு பள்ளியிலும் சோதனை செய்து வருகிறோம்.. மேலும் பள்ளி நிர்வாகத்துடன் தொடர்பில் இருக்கிறோம்” என தெரிவித்தார்.

இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் தலைநகரில் மிகப்பெரிய பயத்தையும் பீதியையும் ஏற்படுத்தி இருக்கிறது. தேர்வு நேரத்திலும் தேர்தல் நேரத்திலும் இப்படியான மிரட்டல் மக்களின் இயல்புநிலையை கடுமையாக பாதித்திருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பாக, டெல்லி கல்வித்துறை அமைச்சர் அதிஷி கூறுகையில்,

“இன்று காலை சில பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வெளியேற்றப்பட்டு அந்த வளாகங்களில் டெல்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த ஒரு பள்ளியிலும் எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் காவல்துறை மற்றும் பள்ளிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தேவைப்படும் இடங்களில் பள்ளி அதிகாரிகள் பெற்றோருடன் தொடர்பு கொள்வார்கள்” என தெரிவித்து இருக்கிறார்.

சுமார் 50 பள்ளிகளில் இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்திருக்கும் நிலையில், தற்போது டெல்லியில் இருக்கும் மற்ற பள்ளிகளும் அவர்களது மின்னஞ்சலை சோதித்து வருகின்றனர். இதனால், தலைநகர் டெல்லியில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

 

Related posts

இந்தியாவின் ஏவுகணை சோதனை..!

tharshi

கைக்கொடுத்த தமிழர் : உயிரை எடுத்த வடமாநில இளைஞர்..!

tharshi

ஸ்கேட்டிங் மூலம் தமிழக சிறுமி உலக சாதனை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy