Sangathy
India

கைக்கொடுத்த தமிழர் : உயிரை எடுத்த வடமாநில இளைஞர்..!

நீண்டகாலமாக சந்திக்காமல் இருந்த வட மாநில நண்பரை சந்தித்த போது, கைக்கொடுத்து பேசிய இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கோத்தகிரியில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக 6 வட மாநில இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் அருள் பாண்டி (28). இவர் தனது நண்பர்கள் வசந்த், அருள்குமார் ஆகியோருடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு இரு சக்கர வாகனத்தில் கோத்தகிரிக்கு சென்றுள்ளார். கோத்தகிரியை சுற்றிபார்த்துவிட்டு திரும்பும் போது, பெரியநாயக்கன் பாளையத்தில் பர்னிச்சர் தொழில் செய்து வரும் வட மாநிலத்தைச் சேர்ந்த இந்தர்ஜித் என்பவரை அருள்பாண்டி சந்திதுள்ளார்.

இந்தர்ஜித் தனது வட மாநில நண்பர்கள் 5 பேருடன் காரில் வந்திருக்கிறார். இதையடுத்து, அருள்பாண்டியும், இந்தர்ஜித்தும் தங்கள் வாகனங்களை ஓரமாக நிறுத்தி, பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இந்தர்ஜித்தும், அருள்பாண்டியும் ஒருவருக்கொருவர் கைக்கொடுத்தப்படி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கிண்டலாக இந்தர்ஜித், அருள் பாண்டியின் கையை அழுத்தியுள்ளார்.

இது அருள்பாண்டிக்கு வலியை கொடுத்திருக்கிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பாக மாறியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, அவர்களின் நண்பர்கள், இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர். பின்னர் அருள்பாண்டி தனது நண்பர்களுடன் சேர்ந்து கோவைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த இந்தர்ஜித், தனது காரை கொண்டு அருள் பாண்டியின் பைக் மீது மோதியுள்ளார்.

இதில் அருள்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அருள் பாண்டியுடன் இருந்த வசந்த், அருள்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்த தகவலின் பேரில் போலீஸார், சிசிடிவி காட்சிகளை கொண்டு இந்தர்ஜித் உள்ளிட்டோரை தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் பதுங்கி இருந்த இந்தர்ஜித் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

Related posts

ஒடிசாவில் கோர விபத்தில் சிக்கிய சுற்றுலா பஸ் : 5 பேர் பலி..!

tharshi

தந்தை திருட்டு வழக்கில் கைது : அவமானத்தில் பட்டதாரி மகன் தற்கொலை..!

Lincoln

அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு : ராகுல் காந்தி

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy