Sangathy
Sports

ஐ.பி.எல். 2024 : பெங்களூரு-ஹைதராபாத் அணிகளிடையான மோதல் இன்று..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், இன்று ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41ஆவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் – பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

முன்னாள் சம்பியனான ஹைதராபாத் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 5 வெற்றி (மும்பை, சென்னை, பஞ்சாப், பெங்களூரு, டில்லி அணிகளுக்கு எதிராக), 2 தோல்வி (கல்கத்தா, குஜராத் அணிகளிடம்) அடைந்துள்ளது. முதல் 3 ஆட்டங்களில் 2-ல் தோல்வியை சந்தித்த அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றியை பெற்று எழுச்சி கண்டுள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி (பெங்களூருவுக்கு எதிராக 287 ஓட்டங்கள்) என்ற சாதனையை படைத்த ஹைதராபாத் அணி, நடப்பு தொடரில் 3 முறை 260 ஓட்டங்களுக்கு மேல் சேர்த்து வியக்க வைத்துள்ளது

பெங்களூரு அணி இந்த சீசனிலும் பெருத்த ஏமாற்றத்தை சந்தித்துள்ளது. தனது 2-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப்பை பதம் பார்த்த பெங்களூரு அணி 7 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. கல்கத்தாவுக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 223 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய பெங்களூரு அணி 221 ஓட்டங்கள் எடுத்து ஒரு ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை கோட்டை விட்டது.

இவ்விரு அணிகளும் இதுவரை 23 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஹைதராபாத் 13 ஆட்டத்திலும், பெங்களூரு 10 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

Related posts

Max Verstappen wins F1 title with four races to spare

Lincoln

Fakhar Zaman’s 180* leads Pakistan to their second-highest ODI chase

Lincoln

Bishop’s College clinch Under 15 girls’ tennis title

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy