Sangathy
World Politics

லாட்டரியில் ரூ. 10 ஆயிரம் கோடி : புற்றுநோயால் பாதித்தவருக்கு அடித்த ஜாக்பாட்..!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு லாட்டரியில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஜாக்பாட் அடித்திருப்பது இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்தவருக்கு ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டியுள்ளது.

அமெரிக்க லாட்டரலி குலுக்கலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் தட்டி தூக்கியிருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாவோஸ் நாட்டில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர் 46 வயதான செங் சேபன். இவர் கடந்த 8 ஆண்டு காலமாக புற்றுநோயுடன் போராடி வருகிறார். இந்நிலையில் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை பவர்பால் ஜாக்பாட்டில் அள்ளிக் குவித்துள்ளார். இந்த பரிசு தொகையின் மூலம் தனது சிகிச்சைக்கான செலவை பார்த்துக்கொள்ளலாம் என ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார் சேபன்.

422 மில்லியன் அமெரிக்க டாலர்

ஓரிகானின் போர்ட்லேண்டில் ஏப்ரல் 7 ஆம் திகதிக்கான வெற்றிக்கான டிக்கெட்டை தனது நண்பருடன் சேர்ந்து செங் சேபன் வாங்கியுள்ளார். இதனை பவர்பால் ஜாக்பாட் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவரது வெற்றியின் அறிவிப்புக்குப் பிறகு, செங் சேபன் வரிகள் பிடித்தம் போக 422 மில்லியன் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளார்.

மொத்த பரிசு தொகை இந்திய ரூபாய் மதிப்பில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும். அதாவது 1,08,47,94,75,000.00 இந்திய ரூபாய் ஆகும் . ஆனால் வரி பிடித்தம் போக 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் பெற்றுள்ளார் சேபன். அதாவது 35,21,61,95,400.00 இந்திய ரூபாய் ஆகும். சேபன் இந்த ஜாக்பாட் பரிசு தொகையை தனது மனைவி மற்றும் நெருங்கிய நண்பருடன் சமமாகப் பிரித்துக் கொள்ள விரும்புவதாகக் கூறப்படுகிறது.

தான் பவர்பால் ஜாக்பாட் வென்றது குறித்து பேசியுள்ள செங் சேபன், தன்னால் தற்போது தனது குடும்பத்தை ஆசீர்வதிக்க முடியும் என்றும் தனக்காக ஒரு நல்ல மருத்துவரை நியமிக்க முடியும் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார். நிறைய நிதி சிக்கல்களை எதிர்கொண்டதால், உதவிக்காக கடவுளிடம் எப்போதும் பிரார்த்தனை செய்ததாகவும் செங் சபேன் தெரிவித்துள்ளார்.

தற்போது கடவுள் அருளால் கிடைத்துள்ள பணத்தில் தனது கனவு இல்லத்தை வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மீண்டும் வெற்றி பெறும் நம்பிக்கையில் தொடர்ந்து பவர்பால் விளையாடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அவர் தனது மனைவி மற்றும் நண்பருடன் சேர்ந்து ஏப்ரல் 7ம் தேதி டிராவிற்காக 20க்கும் மேற்பட்ட பவர்பால் டிக்கெட்டுகளை வாங்கியதாக அவர் கூறினார்.

செங்கிற்கு கடந்த 8 ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. லாவோஸில் பிறந்த செங் சபேன், 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு குடிபெயர்வதற்கு முன்பு 1987 இல் தாய்லாந்திற்குச் சென்றார். முடிவுகளின்படி, பரிசுகளை வென்ற அதிர்ஷ்ட எண்கள் 22, 27, 44, 52, 69 மற்றும் சிவப்பு பவர்பால் 9 ஆகும். ஓரிகான் லாட்டரியின் படி, வெற்றிபெற்ற இந்த டிக்கெட் போர்ட்லேண்டில் உள்ள ஒரு ப்ளாய்ட் பேண்ட்ரி கன்வீனியன்ஸ் கடையில் இருந்து வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெற்றி டிக்கெட்டை விற்றதற்காக லாட்டரி சில்லறை விற்பனையாளருக்கு 100,000 அமெரிக்க டாலர்கள் கமிஷனாக வழங்கப்படுகிறது. இந்திய ரூபாயின் மதிப்பில் 83,47,250 ஆகும். பவர்பால் வரலாற்றில் இது நான்காவது பெரிய ஜாக்பாட் ஆகும். அமெரிக்காவில் வசித்து வரும் வெளிநாட்டைச் சேர்ந்தவர் பவர்பால் லாட்டரியில் பெரிய ஜாக்பாட்டை வென்ற தகவல் சமூக வலைதளங்களிலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

 

Related posts

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை..!

tharshi

ஜப்பானில் டிரெண்டாகும் நட்பு திருமணம்..!

tharshi

Srilanka – Looters of the State

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy