Sangathy
Sports

எனது கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி தான் என் அப்பா : சிஎஸ்கே வீரர் பத்திரனா நெகிழ்ச்சி..!

17-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் மாதம் 22-ஆம் திகதி சென்னையில் தொடங்கியது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இந்த போட்டி தொடர் நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனும், ஐ.பி.எல். கோப்பையை 5 முறை வென்ற அணியுமான சென்னை சூப்பர் கிங்ஸ் 5 வெற்றி, 5 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 11-வது போட்டியில் பஞ்சாப் கிங்சை நாளை (5-ஆம் திகதி) மீண்டும் சந்திக்கிறது. இந்த ஆட்டம் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தரம்சாலாவில் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.டோனி தம்மை மற்றொரு அப்பாவைப் போல பார்த்துக் கொள்வதாக பத்திரனா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

பத்திரனாவின் வீடியோ ஒன்றை சிஎஸ்கே நிர்வாகம் தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில்,

“என்னுடைய அப்பாவுக்கு பின் கிரிக்கெட் வாழ்க்கையில் டோனி பெரும்பாலும் என் அப்பாவின் வேலையை செய்கிறார். எப்போதும் என் மீது அக்கறையை காட்டும் அவர் நான் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய சில ஆலோசனைகளை கொடுக்கிறார். எனது வீட்டில் இருக்கும் போது கிட்டத்தட்ட எனது அப்பா காட்டும் அக்கறையை அவர் இங்கே காட்டுகிறார். அதுவே போதும் என்று நினைக்கிறேன்.

களத்திலும் களத்திற்கு வெளியேயும் அவர் நிறைய விஷயங்களை என்னிடம் சொல்ல மாட்டார். சிறிய விஷயங்களை மட்டுமே சொல்வார். ஆனால் அது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அது எனக்கு நிறைய தன்னம்பிக்கையையும் கொடுக்கும்” என்று அவர் கூறினார்.

கடந்த ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடிய பத்திரனா 19 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்த சீசனில் இதுவரை 13 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Eleven Orlando Magic and Dallas Pistons players suspended after scuffle

Lincoln

Argentina bids to host U20 World Cup in place of Indonesia

Lincoln

People are cheering for the Brazilian team

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy