மாணிக்கம் ஸ்ரீரஞ்சிதமலர் (பவா). பிறப்பு 09 FEB 1950, இறப்பு 03 MAY 2024
(வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை பழைய மாணவி)
ஓய்வு நிலை பிரதேச சபை செயலாளர் வலி. வடக்கு மல்லாகம், ஓய்வு நிலை நிர்வாக அதிகாரி வலிகாமக் கல்வி வலயம்.)
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. மாணிக்கம் ஸ்ரீரஞ்சிதமலர் கடந்த 03.05.2024 அன்று இறைபதம் அடைந்து விட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தமுத்து – நல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற விநாயகன் – அன்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும், லயன் விநாயகன் மாணிக்கம் ( ஓய்வு நிலை அதிபர் யாழ். கனகரெத்தினம் ம.ம, வித்தியாலயம், ஓய்வு நிலை பிரதிக்கல்விப் பணிப்பாளர் யாழ். வலயம்) அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற செந்தூரன் மற்றும் சுகன்யா ( உஷா – கனடா – முன்னாள் முகாமையாளர் மக்கள் வங்கி – இணுவில்), சகிலேந்திரா ( கண்ணன் – லண்டன் மென்பொருள் பொறியியலாளர்), காலஞ்சென்ற லாவண்யா (யசோ) ஆகியோரின் அன்புத் தாயாரும், ராஜ்பவன் ( கனடா – CANADA POST ), பிருந்தா ( லண்டன் – QUANTITY SURVEYOR) ஆகியோரின் மாமியாரும், ரக்ஷன்யா, அகன்யா, தீக்ஷிதன், நிகித்ரா, ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும், காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தரா மற்றும் ஸ்ரீரஞ்சனி, சறோஜினி, ஸ்ரீபத்மினி, ஸ்ரீவையந்தி ஆகியோரின் பாசமிகு சகோதரியும், புளோரா அமரர்களான விநாயகமூர்த்தி, முருகையா, குணரெத்தினம் மற்றும் துரைசிங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 614/3 K.K.S வீதி, யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் இன்று 06.05.2024 திங்கட்கிழமை நடைபெற்று, மு.ப 11:00 மணியளவில் பூதவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும். இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்,
லயன் வி. மாணிக்கம் : 0776057490
மகன் : 0787635436
மகள் : 0787638443
அமரர் மாணிக்கம் ஸ்ரீரஞ்சிதமலர் அவர்களின் இறுதியாத்திரை ( LIVE )
You must be logged in to post a comment.