Sangathy
India

NEET கேள்விகள் முன்கூட்டியே லீக் ஆனதா..? : 24 லட்சம் மாணவர்களுக்காக துடித்தெழுந்த பிரியங்கா காந்தி ..!

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக NEET நடத்தபட்டு வருகிறது. இம்முறை மே 5 தேர்வு நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்த தேர்வின் கேள்விகள் முன்கூட்டியே வெளியானதாக கூறி அதனை கண்டித்து இருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி.

2024-2025 ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான நீட் நேற்று நடந்து முடிந்தது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளின் இளநிலை பட்டங்களுக்கான தேர்வாக இது நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் இருக்கும் சுமார் 557 நகரங்களிலும் 14 வெளி நாடுகளிலும் நீட் தேர்வு நடைபெற்றது.

பிற்பகல் 2 மணி முதல் மாலை 5:20 மணிவரை இந்த நீட் தேர்வு நடைபெற்றது. இந்தாண்டு சுமார் 24 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தார்கள். தமிழ்நாடு பொருத்தவரையில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நுழைவு தேர்வு நாட்டில் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேர்வு நடக்கும் இடத்தில் ஏதேனும் முறைகேடுகள் நடக்கின்றதா என்பதனையும் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். இந்நிலையில் நீட் தேர்வின் வினாக்கள் முன்கூட்டியே வெளியானதாக சில தகவல்களை இணையத்தில் பரவி வந்தன.

இது குறித்த கண்டனத்தை தெரிவித்திருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பிரியங்கா காந்தி.

அது குறித்து அவரது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்ட பதிவில்,

“மீண்டும், நீட் தேர்வுத் வினாக்கள் கசிவு குறித்த செய்திகள் வெளியாகியுள்ளன. நாட்டின் 24 லட்சம் இளைஞர்களின் எதிர்காலம் மீண்டும் குழப்பமடைந்துள்ளது. கடந்த பத்து வருடங்களாக கோடிக்கணக்கான நம்பிக்கை தரும் இளைஞர்களுடன் நடந்து வரும் இந்தப் போக்கு இன்னும் நிற்கவில்லை.

இது குறித்து நாட்டின் பிரதமர் ஏதாவது கூறுவாரா? இளைஞர்களை அமைதிப்படுத்தும் வகையில், வினாக்கள் கசிவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. எங்கே அந்த சட்டம்? அதை ஏன் செயல்படுத்தவில்லை?

அதனால்தான் வேலையில்லாத் திண்டாட்டம், வேலையில் ஊழலும் இந்தத் தேர்தலில் மிகப் பெரிய பிரச்சினைகளாக இருக்கின்றன. வினா கசிவுகள் நடக்காது என்பதுதான் நமது (காங்கிரஸ் கட்சியின்) நியாய பத்ராவின் தீர்மானம். முறையாக ஆட்சேர்ப்பு நடைபெறும். காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைப்பது நிறுத்தப்படும், அதை செய்தும் காட்டுவோம்” என பிரியங்கா காந்தி அவரது பதிவில் குறிபிட்டு இருக்கிறார்.

எனினும், நீட் தேர்விற்கான வினாக்கள் உண்மையில் முன்கூட்டியே லீக் ஆனதா என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலோ, அதனைச் சார்ந்த புகாரோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

“சூப்பர் எல் நினோ” இந்தியாவை பாதிக்குமா..!

tharshi

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் ரெய்டு..!

tharshi

பா.ஜ.கவுடன் இணைந்த நடிகர் சரத்குமார்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy