Sangathy
Srilanka

எனக்கு வாக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை – போதைப்பொளுக்கு முற்றுப்புள்ளி வைப்பேன் : சஜித்..!

இன்று மதுபான அனுமதிப் பத்திரங்கள், குறைந்த அளவில் போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் மற்றும் அதிக போதையூட்டும் மதுபான வகைகளுக்கான அனுமதிப்பத்திரம் என பெரும் அரசியல் சூதாட்டம் நடந்து வருகிறது.

இதன் மூலம் வாக்கு சேகரிக்க சிலருக்கு பணம் கிடைத்தாலும், நாட்டுக்கும், மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நேர்ந்த பயன் ஏதுமில்லை. அரசியல்வாதிகள் வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குவதை போல மது மற்றும் போதைப்பொருளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மதுபான நிறுவனங்கள் இன்று சக்தி வாய்ந்த ஒன்றாக மாறிவிட்டன. இந்நிறுவனங்களால் எந்தவொரு பிரபல நபரையும் பணத்துக்காக எடுத்துக் கொண்டு, அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய முறையான வரிகளை செலுத்தத் தவறி விடுகின்றனர். பண பலம் இருப்பதால் மாத்திரம் வரி செலுத்தாமல் இருப்பது ஒருபுறமிருக்க,மறுபுறம் நாட்டு மக்களையும், பிள்ளைகளையும், இளைஞர்களையும் மரணப் படுக்கைக்கு இட்டுச்செல்கின்றனர்.

இது குறித்து பிள்ளைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரியவர்கள் இதுபோன்ற செயல்களைச் செய்தாலும் இளைஞர்கள், பிள்ளகைகளை இதிலிருந்து விடுவிக்க வேண்டும். இதிலுள்ள கசப்பான உண்மையைப் பேச வேண்டும். வாக்குகளைப் பெறுவதற்காக மதுபான, பியர் அனுமதிப் பத்திரங்களை விநியோகிப்பது உகந்த காரியமல்ல. தற்போது மத வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும் பியர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படுகின்றன. எதிர்ப்புகள் வந்தாலும் அவ்வாறான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டே வருகிறது.

மூச்சுத் திட்டத்தின் 60 ஆவது கட்டமாக மஹர, மல்வத்து, ஹிரிபிட்டிய வைத்தியசாலைக்கு 1,300,000 பெறுமதியான Mini Autoclav 1 மற்றும் Pulse Oximeter 1 என்பவற்றை நன்கொடையாக வழங்கி வைக்கும் நிகழ்வில் நேற்று(14) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யார் என்ன சொன்னாலும், யார் என்ன செய்தாலும் பிள்ளைகள், மது, சிகரெட் போதைவஸ்துக்களை அடியோடு ஒழிப்போம். இது குடும்பத்தின் வளர்ச்சிக்கு காரணமாக அமையும்.

இவற்றைச் சொன்னால் வாக்குகளை இழக்க நேரிடும். மனசாட்சிப்படி பேச வேண்டும். பிள்ளைகளை உரிய முறையில் பராமரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் நேரத்தில் இளம் தலைமுறையினர் மது, போதைப்பொருள், சிகரெட் போன்றவற்றின் ஆபத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று பல்வேறு போதைக்கு முற்றுபுள்ளி என பல பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டாலும், பாடசாலை பருவத்தில் பல்வேறு திட்டங்களின் மூலம், ஆரம்பத்திலிருந்தே இயன்றவரை மது ஒழிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க நாம் அர்ப்பணிப்போடு செற்பட வேண்டும். மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றை பயன்படுத்தாத ஓர் நபராக இதை கைவிட வேண்டும் என்ற எண்ணப்பாட்டை தாம் கொண்டுள்ளோம்,

மதுபாவனை கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும். ராகம வைத்தியசாலையில் கல்லீரல் மாற்று சிகிச்சை திட்டம் இயங்கி வருகின்றது. இதன் காரணமாக கசப்பான உண்மையை வெளிக்கொணர வேண்டிய தருணம் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

இந்திய முட்டை இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை..!

tharshi

30 சீன பிரஜைகள் கைது..!

Appsron digit

இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy