Sangathy
Srilanka

ஈழ இறுதிப்போரில் காணாமல் போனவர்கள் பற்றி ஐ.நா. பரபரப்பு அறிக்கை..!

2009-ம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் ஈழ இறுதிப்போர் நடைபெற்றது. இந்த போரில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் (தற்போது அவர் உயிரோடு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் கொல்லப்பட்டரா? என்பதில் சர்ச்சை நீடிக்கிறது). பிரபாகரன் கொல்லப்பட்டார் என அறிவித்த இலங்கை ராணுவம் கூறியதுடன் ஈழ இறுதிப்போர் முடிவுக்கு வந்தது.

இந்த போரின்போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்ததாகவும், ஏராளமானோர் காணாமல் போனதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. போருக்கு பின்னரும் ஈழத்தமிழர்கள் வசித்த இடங்களை இலங்கை ராணுவம் ஆக்கிரமித்து இளைஞர்களை பிடித்துச் சென்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில் ஈழ இறுதிப்போர் தொடர்பாக ஐ.நா. ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “இலங்கை இறுதிப் போரிலும், போருக்குப் பிறகும் காணாமல் போன ஈழத்தமிழர்கள் பற்றிய விசாரணையை வேகப்படுத்த வேண்டும். போரில் காணாமல் போனவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசுப் படைகளுக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு இலங்கை அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும்.

காணாமல் போனவர்கள் தொடர்பாக சுதந்திரமான விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். இது தொடர்பான அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியில் சீர்திருத்தங்களை இலங்கை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சர்வதேச விதிமீறல்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தை துரித கதியில் நிறுவ வேண்டும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் இலங்கை அரசின் உயர் பதவிகளில் நீடிக்க அனுமதிக்க கூடாது. தொடர்புடையவர்களை பெரிய பதவிகளில் நியமிக்கவும் கூடாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

நாடு முன்னேற வேண்டுமானால் கல்வி முறையில் புதிய மாற்றம் வேண்டும் : ஜனாதிபதி

tharshi

வீடொன்றிலிருந்து இரு சடலங்கள் மீட்பு..!

tharshi

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy