களுத்துறை, இசுரு உயன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் இரு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இரு பெண்களின் சடலங்கள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், இருவரும் சில நாட்களுக்கு முன்பு இறந்திருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியதைக் கண்ட பிரதேசவாசிகள், பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்கள்.
சோதனைகளை மேற்கொண்டு பின்னர் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டனதென பொலிஸார் தெரிவித்தனர்.