Sangathy
India

தொடரும் மர்மங்கள்.. வீட்டு செப்டிக் டேங்கில் மூன்று கிலோ மனித சதை..!

தனது மருத்துவ சிகிச்சைக்காக வங்காளதேசத்தில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கோல்கத்தாவிற்கு வந்தார் அந்நாட்டின் ஆளும் கட்சியின் எம்பி அன்வருல் அசிம் அன்வர். இவர் கொலை செய்யபட்ட செய்திகள் வெளியானது. இந்நிலையில், அவர் தங்கி இருந்த வீட்டின் செப்டிக் டேங்கில் வெட்டப்பட்ட உடல் துண்டுகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

வங்கதேசத்தின் ஆளும் கட்சியான அவாமி லீக் கட்சியின் எம்பி அன்வருல் அசிம் அன்வர் தனது மருத்துவ சிகிச்சைக்காக மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவிற்கு வந்திருந்தார். அமெரிக்காவில் வசிக்கும் அவரது இந்திய நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். சிகிச்சைக்காக இந்தியா வந்த மறுநாளே அவர் காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இந்தியாவில் இருக்கும் அவருக்கு தெரிந்தவர்களும் வங்கதேசத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினரும் புகார்ட் கொடுத்திருந்தார்கள். அதன்பிறகு, இவர் கொலை செய்யபட்டு இருக்கலாம் என போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள்.

அந்த வகையில், அமெரிக்காவில் வசிக்கும் அவரது இந்திய நண்பர் மற்றும் கொலை செய்யபட்ட வங்கதேச எம்பி இருவருமாக சேர்ந்து இந்தியாவிற்கு கடத்தல் பொருட்களை கொண்டு வந்து அதை வைத்து தொழில் செய்தது தெரியவந்தது. இதில், ஏற்பட்ட குடுக்கல் வாங்கல் பிரச்சனையில் இவருக்கும் அமெரிக்க நண்பருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில், பெங்கால் சிஐடி அதிகாரிகள் அவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நியூடவுன் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தின் செப்டிக் டேங்கில் சோதனை மேற்கொண்டதில் அங்கு வெட்டபட்ட மனித உடல் இறைச்சி காணபட்டது. செப்டிக் டேங்கில் சுமார் மூன்றரை கிலோ இறைச்சிக் கட்டிகள் மற்றும் சிகை முடிகள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கண்டெடுக்கபட்ட இந்த உடல் துண்டுகள் வங்கதேச எம்பியுடையதா அல்லது அப்பகுதியில் வேறு கொலை நடந்துள்ளதா என விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள் போலீசார். இதனை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்காக தடயவியல் ஆய்வகத்திற்கு கிடைத்த உடல் துண்டுகளை அனுப்பி வைத்து இருக்கிறார்கள் அதிகாரிகள்.

மேலும், பங்களாதேஷ் எம்பி அன்வருல் கொல்லப்பட்ட குடியிருப்பின் குளியலறையில் அவரது இரத்தம் கரைக்கபட்டு கழிவுநீர் குழாய்கள் வழியாக அனுப்பபட்டு இருக்கலாம் என போலீஸ் அதிகாரி கூறினார். அந்த வகையில், குடியிருப்புவளாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் குழாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகள் ஆய்வு செய்யப்பட்டு இறைச்சிக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.

மேலும், கொல்கத்தா காவல்துறையின் பேரிடர் மேலாண்மைக் குழு செவ்வாயன்று ராஜர்ஹட் அருகே பொழுதுபோக்கு பூங்காவை ஒட்டியுள்ள பாக்ஜோலா கால்வாயில் ட்ரோன்களைப் பயன்படுத்தி மீண்டும் தேடுவதைத் தொடர்ந்ததாக மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

ரெமல் புயலால் பெய்த கனமழை காரணமாக எம்பி.யின் உடல் உறுப்புகளை கண்டுபிடிப்பது கடினமானதாக கொல்கத்தா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். “குற்றம் நடந்து 15 நாட்கள் ஆகிறது. கொலை செய்து உடலை சிறு துண்டுகளாக வெட்டி, கால்வாயில் வீசியதால் தண்ணீரில் இருந்த விலங்குகள் அவற்றை சாப்பிட்டு இருக்கலாம் எனவும் கூறபட்டு இருக்கிறது.

குறிபிட்ட அந்த பகுதியின் கால்வாய் முழுவதும் அசுத்தமாக உள்ளது. அதன் ஓட்டம் காரணமாக உடல் உறுப்புகள் குளத்திற்கு சென்றிருக்கலாம்,” எனவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் மற்றும் உடல் உறுப்புகளை மீட்க நீர்மூழ்கி வீரர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கசாப்பு வியாபாரியான குற்றவாளி, எம்பியை கொன்று உடலை 80 துண்டுகளாக வெட்டி, மஞ்சள் தடவி, வெவ்வேறு இடங்களில் வீசியதாக போலீசார் கூறினர். தொண்ட தொண்ட புதுப்புது தகவல்கள் கிடைத்துவரும் வங்கதேச எம்பியின் கொலை சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் கடுமையான சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Related posts

13 வயது சிறுமிக்கு வருடக்கணக்கில் பாலியல் சித்ரவதை : தந்தை- சகோதரன் மற்றும் உறவினர் கைது..!

tharshi

இந்தியாவின் ஏவுகணை சோதனை..!

tharshi

பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய ஜோடி..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy