Sangathy
India

பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டரை திட்டம் போட்டு தீர்த்துக்கட்டிய ஜோடி..!

சென்னை செம்மஞ்சேரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் திட்டம்போட்டு மாஸ்டரை கொலை செய்து இருக்கிறார்கள்.

சென்னை செம்மஞ்சேரி பகுதியில் கராத்தே மாஸ்டராக பலருக்கு கராத்தே பயிற்றுவிக்கிறார் லோகநாதன். இவரது கொலை கடந்த 12 நாட்களுக்கு முன்பு நடந்திருக்கிறது. இந்த கொலையின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் திடுக்கிடும் வகையில் இருக்கிறது.

கராத்தே மாஸ்டர் லோகநாதனை கணவன், மனைவி, இரண்டு நண்பர்கள் என நான்கு பேர் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். செம்மஞ்சேரி அருகில் OMR பகுதியில் இந்த கொலை நடந்திருக்கிறது. இது குறித்து போலீசார் கூறுவது, ரெட்டிக்குப்பம் பகுதியை சேந்த லோகநாதன் கொலை செய்த ஜோடியின் வீட்டிற்கு அவர்களது குழந்தைக்கு கராத்தே சொல்லிக் கொடுப்பதற்காக செல்வதுண்டு.

அப்படி மார்ச் 13 கராத்தே கற்றுக்கொடுக்க ஜோடியின் வீட்டிற்கு சென்ற லோகநாதன், நேரமாகியும் அவருடைய வீட்டிற்கு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து லோகநாதனின் குடும்பத்தார் போலீசிடம் இவரை காணவில்லை என புகார் கொடுத்தார்கள்.

லோகநாதனின் போன் லொகேஷன் கடைசியாக செம்மஞ்சேரி ஜோடியின் வீட்டையே காட்டியுள்ளது. அதன்படி, அந்த வீட்டிற்கு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனது குழந்தைக்கு லோகநாதன் கராத்தே கற்றுக்கொடுக்க வந்ததாகவும், அதன்பிறகு அவரை பற்றி எந்த தகவலும் தெரியவில்லை எனவும் கூறியிருக்கிறார்.

போலீசிடம் பேசுகையில் பேச்சில் தடுமாற்றம் இருந்துள்ளது. அதனால் அதிகாரிகளுக்கு இவர்மீது சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து போலீசார் கேள்விகளை கேட்டுக்கொண்டிருக்க, தான்தான் லோகநாதனை கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார்.

அதன்பிறகு, லோகநாதனை புதைத்த இடத்தையும் அவர்களுக்கு காட்டினார். அதன்பிறகு பேசிய அவரது மனைவி, லோகநாதனை பலமுறை எச்சரித்தும் பாலியல் ரீதியாத தன்னை துன்புறுத்தியதாகவும், திட்டம்போட்டு, லோகாந்தனை மது அருந்துவதற்காக வீட்டிற்கு அழைத்ததாகவும், அதன்பிறகு, இரண்டு நண்பர்களின் உதவியுடன் அவரை கொலை செய்ததாகவும் கூறினார்.

கொலை செய்ததும் லோகநாதனின் உடலை வீட்டிற்கு பின் இருக்கும் கிணற்றில் புதைத்ததாகவும் அந்த ஜோடி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த ஏரியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

இந்திய ஹோட்டல்களில் தீப்பரவல்..!

Lincoln

இந்திய பாராளுமன்றத்தின் மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரித்தானிய பிரதமரின் அத்தை..!

Lincoln

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்காலத் தடை..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy