Sangathy
Cinema World

நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட வீட்டில் குடியேறிய நடிகை அதா சர்மா..!

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் வாழ்ந்த அபார்ட்மென்ட்டில் குடியேறியிருக்கிறார் நடிகை அதா சர்மா. இதையடுத்து அனைவரின் கவனமும் அதா சர்மா மீது திரும்பியிருக்கிறது. அந்த வீட்டில் பாசிட்டிவ் வைப் வருவதாக கூறுகிறார் அதா.

பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் இருக்கும் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் இருந்து அவரின் மரணத்திற்கு நியாயம் கேட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.

சுஷாந்தின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று அவரின் ரசிகர்கள் தொடர்ந்து கூறி வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட் வசித்து வந்த அபார்ட்மென்ட்டில் குடியேறியிருக்கிறார் நடிகை அதா சர்மா.

சுஷாந்த் வீட்டில் அதா சர்மா இருக்கிறாராமா என ஆளாளுக்கு பேசத் துவங்கிவிட்டார்கள். இந்நிலையில் சுஷாந்த் வீட்டில் குடியேறியது குறித்து அதா சர்மா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

நான் பிரைவசியை விரும்புபவள். என் வாழ்க்கையின் சில விஷயங்களை மட்டுமே சமூக வலைதளத்தில் தெரிவித்திருக்கிறேன். இனியும் அப்படித் தான். எனக்கு எது சவுகரியமோ அதை தான் ஷேர் செய்வேன்.

என் வீட்டிற்கு நிறைய பறவைகள், அணில்கள் வருகின்றன. அவைகள் மட்டும் என் பிரைவசியை தாண்டி வர அனுமதி உண்டு என்றார்.

மான்ட் பிளான்க் எனப்படும் கடற்கரையை பார்த்தபடி இருக்கும் அந்த டூப்ளெக்ஸ் அபார்ட்மென்ட்டில் கடந்த 2020ம் ஆண்டு சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதில் இருந்து காலியாக இருந்தது. 4 ஆண்டுகளாக காலியாக இருந்த வீட்டில் தன் அம்மா, பாட்டியுடன் குடியேறியிருக்கிறார் அதா சர்மா.

சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டதால் அந்த வீட்டில் குடியேற அனைவரும் பயந்தார்கள். ஆனால் அந்த வீட்டில் பாசிட்டிவ் வைப் வருவதாகக் கூறி வந்திருக்கிறார் அதா சர்மா என ரியல் எஸ்டேட் புரோக்கர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒரு உயிர் போன வீட்டில் இப்படி தைரியமாக குடியேறியிருக்கிறீர்களே. உங்களுக்கு பயமாக இல்லையா அதா சர்மா. இரவு நேரத்தில் எப்படி தூங்குகிறீர்கள் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

 

Related posts

வசூல் வேட்டையில் அசத்தும் “கருடன்” : கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா..!

tharshi

சங்கீதாவின் உண்மையை போட்டுடைத்த விஜய்யின் அம்மா..!

tharshi

‘தி கோட் லைப்’ : மனம் குளிர்ந்து பாராட்டிய கமல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy