இந்தியாவின் 15ஆவது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.
இதனையடுத்து புதிய துணை ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ரெட்டி ஆகியோர் போட்டியிட்டனர்.
இதன்படி சி.பி.ராதாகிருஷ்ணன் 452 வாக்குகள் பெற்று துணை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவர் தமிழகம் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
