ஈரான் எம்முடன் ஓர் ஒப்பந்தத்தை எட்டாவிட்டால் இராணுவம் களமிறங்குவதற்கு தயார் நிலையில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏப்ரல் 22ஆம் திகதியான நாளையுடன் நிறைவுக்கு வரவுள்ள போர் நிறுத்தத்தை நீடிக்க விரும்பவில்லை என சி. என். பி. ஸி. ஊடகத்துக்கு அவர் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘எங்களுக்கு அவ்வளவு நேரமில்லை. ஈரான் ஓர் ஒப்பந்தம் செய்தால் மிகவும் வலுவான நிலையை அடைய முடியும். பேச்சு நடத்துவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியில்லை.
போர் நிறுத்த காலத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் ஆயுதங்களை நிரப்பி வருகிறது. நான் உத்தரவிட்டால் ஈரான் மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கத் தயhர் நிலையில் படைகள் உள்ளன.
எங்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. அவர்கள், ஒருவேளை சிறிதளவு ஆயுதங்களை மீண்டும் நிரப்பியிருக்கலாம். நாங்கள் புறப்படத் தயாராக இருக்கிறோம். இராணுவம் களமிறங்க மிகுந்த ஆர்வத்துடன் உள்ளது – எனறு கூறினார்.
