பள்ளிவாசல்களுக்கு பன்றி இறைச்சி அனுப்பிய முதியவருக்கு சிறை

சிங்கப்பூரில் உள்ள ஏழு பள்ளிவாசல்களுக்குப் பன்றி இறைச்சித் துண்டுகளை அனுப்பிய முதியவருக்கு 15 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பில் டான் கெங் ஹுவீ என்னும் அந்த 62 வயதுச் சிங்கப்பூரர் தனது வேலையைப் புதுப்பிக்காத பெண்ணின்மேல் இருந்த கோபத்தால் அவ்வாறு செய்தார்.

பன்றி இறைச்சியுடன் பெண்ணின் பெயரையும் கைப்பேசி எண்ணையும் குறிப்பிட்டு டான் பள்ளிவாசல்களுக்குப் பொட்டலங்களை அனுப்பினார்.

தன்மீது சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளையும் டான் ஒப்புக்கொண்டார்.

2025ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி டான் தனது வேலை புதுப்பிக்கப்படாது என்பதை அறிந்தார்.

அதற்கு அந்தப் பெண்தான் காரணம் என்று கருதிய அவர், அப்பெண்ணின் விவரங்களைக் குறிப்பிட்டு பள்ளிவாசல்களுக்குப் பன்றி இறைச்சியை அனுப்பத் திட்டமிட்டார்.

அந்தப் பெண்ணின் தகவலைக் குறிப்பிடுவதால் பிறர்அவரைத் தொலைபேசியில் அழைத்துத் துன்புறுத்துவார்கள் என்ற எண்ணத்தில் டான் அவ்வாறு செய்துள்ளார்.

திட்டமிட்டதுபோல் செப்டம்பர் 11ஆம் திகதி டான், பள்ளிவாசல்களுக்குப் பன்றி இறைச்சி கொண்ட பொட்டலங்களை அனுப்பினார்.

அதன்பின்னர் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது. பின்னர் டான் கைது செய்யப்பட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles