இலங்கைக்கு மாத்திரமே உரித்தான புதிய பாலூட்டி இனமொன்றை ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
மாத்தளை மாவட்டத்தின் தும்பர மலைத்தொடரின் புவக்பிட்டி பள்ளத்தாக்கு பகுதியில் புதிய எலி இனம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
நீண்டகால ஆராய்ச்சியின் பின்னரே இந்த புதிய கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய இனம் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சி அறிக்கை, உலகப் புகழ்பெற்ற ‘சூ கீஸ்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புதிய உயிரினத்துக்கு முஸ் தும்பர என்று அறிவியல் ரீதியிலும் தும்பர வல்லி ஸ்பினி மூஸ் என்று ஆங்கில ரீதியிலும் தும்பர பள்ளத்தாக்கு முள் எலி என்று தமிழிலும் பெயரிடப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த இனத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான எலிகள் உலர் வலய சுற்றுச்சூழல் அமைப்புகளிலிருந்தே பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும்இ இந்த புதிய இனம் ஈர வலய மலைக்காடொன்றில் கண்டறியப்பட்டமை சிறப்பம்சமாகும் என ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
