தையிட்டி விகாரையை படமெடுத்தவர்களுக்கு நிபந்தனை பிணை!

தையிட்டி விகாரையை படமெடுத்த இளைஞர்களை நிபந்தனை பிணையில் செல்ல மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

வெசாக் தினத்தை முன்னிட்டு தையிட்டி விகாரையில் வழிபாடு நடைபெற்றிருந்த நிலையில், அதனைச் சூழ்ந்த பகுதியில் காணி உரிமையாளர்கள் போராட்டமும் நடைபெற்றது. அந்தச் சமயம், வடமராட்சியை சேர்ந்த இரு இளைஞர்களை விகாரையை படமெடுத்ததாகக் கூறி பொலிஸார் கைது செய்தனர்.

விசாரணையின்போது முரண்பட்ட தகவல்களை தெரிவித்தனர் என்று கூறி பலாலி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இதன்போது, அவர்களை தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆள்பிணையில் விடுவித்த நீதிமன்றம், அவர்களை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலாலி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles