தானசாலையில் வரிசையில் நின்றோரை மோதியது கார்: 6 பேர் பலி! கொழும்பில் துயரம்!!

வெசாக் தானசாலையில் வரிசையில் காத்திருந்தவர்கள்மீது கார் மோதியதில் 15 வயது சிறுமி உட்பட 6 பேர் உயிரிழந்தனர். ஏழு பேர் காயங்களுக்கு உள்ளாகினர்.

கொழும்பு – மீகொடை சந்தியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து இடம்பெற்றது.

மீகொடையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து கொழும்பு அவிசாவளை நோக்கிச் சென்று கொண்டிருந்த வாடகைக் காரே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தையடுத்து 13 பேர் ஹோமகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். எனினும், மருத்துவமனையில் சேர்க்கப்பட முன்னரே 3 ஆண்களும் 3 பெண்களும் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 15 வயது சிறுமியும் அடங்குவார். அவர் பிலியந்தலையை சேர்ந்தவராவார்.

விபத்தையடுத்து தப்பிச் செல்ல முயன்ற காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான சாரதி மதுபோதையில் இருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles