முன்னாள் இராணுவ புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சாலே தொடர்பான தடுப்புக் காவல் மற்றும் விசாரணை நடவடிக்கைகள் குறித்து அரசியல் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், சுரேஷ் சாலே விவகாரம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தொடர்பாக கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது சமூக ஊடகப் பதிவில்,
நந்திக்கடல் பகுதியில் இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள்இ தமிழ்ச்செல்வன் தொடர்பான புலனாய்வு சூழ்நிலைகள் ஆகியவை இன்று தவறாக பயன்படுத்தப்பட்டு சிலர் மீது பழிவாங்கும் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்று குற்றஞ்சாட்டியுள்ளார்
மேலும்இ தற்போதைய விசாரணை அமைப்புகள் மனிதாபிமானம் இல்லாத முறையில் செயல்படுகின்றன. குறிப்பாக சுரேஷ் சாலேமீது கடுமையான நடத்தைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
சாலே தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனிடையேஇ இந்த விவகாரத்தைச் சுற்றி அரசியல் தரப்புகளில் இரு வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. சிலர் இது சட்ட நடவடிக்கை எனக் கூறும் நிலையில்இ மற்றொரு தரப்பு இதை அரசியல் பழிவாங்கல் என விமர்சிக்கிறது.
