இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு போர்க்குற்றவாளி என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி பகிரங்கமாகச் சாடியுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள அவரை, ஹேக் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று மம்தானி வலியுறுத்துகிறார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்திற்காக எதிர்வரும் செப்டம்பர் மாதம் நெதன்யாகு நியூயார்க் வரவிருக்கும் நிலையில், அவரைத் கைது செய்ய தனது நகர காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து மேயர் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக அவர் தற்போது சட்டத் துறையினருடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
