பிரான்ஸில் நிலவி வரும் கடும் வெப்ப அலை காரணமாக வனவிலங்கு பாதுகாப்பு மையங்கள் மிகக் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக சர்வதேச விலங்கு நல நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
வெப்ப அலை காரணமாக நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக ஏராளமான பறவைகளும் விலங்குகளும் வீதிகளில் மயங்கி விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸில் உள்ள 70 சதவீதத்திற்கும் அதிகமான பாதுகாப்பு மையங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதால், புதிய விலங்குகளைப் பொறுப்பேற்பதை நிறுத்தியுள்ளன.
அதேசமயம் காட்டுத்தீ மற்றும் கடும் வெப்பத்திலிருந்து தப்ப முடியாமல் பல விலங்குகள் உயிரிழந்து வருவதால், மீட்டெடுக்க முடியாத இயற்கை இழப்பு ஏற்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
