பிரித்தானியாவில் வறட்சியால் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் சாத்தியம்

பிரித்தானியாவில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக உணவு விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் 07 முக்கிய பகுதிகளில் வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் உற்பத்தியை வெகுவாக பாதித்துள்ளதுடன், உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையானது பல்பொருள் அங்காடிகளில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கும், நுகர்வோருக்கான மளிகைப் பொருட்களின் விலைகள் உயர்வதற்கும் வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

உருளைக்கிழங்கு, கரட் மற்றும் வெங்காயம் போன்ற தோட்ட காய்கறிகள் குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளன. சில விவசாயிகள் விளைச்சலில் 20 சதவீதம் வரை குறைவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கின்றனர்.

வெப்ப அழுத்தம் கால்நடை வளர்ப்பையும் பாதிக்கிறது, இதனால் இறைச்சி, முட்டை மற்றும் பால் விநியோகம் குறையக்கூடும்; தானிய அறுவடைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பரவலான விவசாய பாதிப்புகள் 2027 ஆம் ஆண்டு வரையிலும் தொடரும் என்று சில நிபுணர்கள் கணிக்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles